விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் கேப்டன் சஸ்பெண்ட்!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் கேப்டன் சஸ்பெண்ட்!

webteam

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணி களுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பார்படாஸில் நடந்த முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 381 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஆண்டிகுவாவில் நடந்தது. இந்தப் போட்டியிலும் இங்கிலாந்து அணி படு தோல்வி அடைந்தது. இதையடுத்து டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியுள்ளது. 
இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, செயின்ட் லூசியாவில் நடக்கிறது.

2வது டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், அடுத்தப் போட்டியில் விளையாட, வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு ஐசிசி தடை விதித்துள்ளது.

இதையடுத்து அந்த அணியின் துணை கேப்டன் கிரைக் பிராத்வெயிட் அணியை வழி நடத்துகிறார். ஹோல்டருக்கு பதில், கீமோ பால் சேர்க்கப்பட்டுள்ளார்.