விளையாட்டு

“ஐந்து நாள் நல்லா பயிற்சி எடுத்துவிட்டு வந்திருக்கோம்” - ரோகித் சர்மா நம்பிக்கை

“ஐந்து நாள் நல்லா பயிற்சி எடுத்துவிட்டு வந்திருக்கோம்” - ரோகித் சர்மா நம்பிக்கை

rajakannan

முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்களை குவிக்க திட்டமுள்ளதாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ் இடையிலான இறுதிப் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். டாஸ் வென்றிருந்தால் பந்துவீச்சை தேர்வு செய்யலாம் என்றுதான் முடிவு செய்திருந்ததாக தோனியும் கூறினார்.

டாஸுக்கு பின்னர் பேசிய ரோகித், “இது மிகப்பெரிய போட்டி. முதலில் பந்துவீச்சுக்கு மைதானம் சாதகமாக இருக்கலாம். ஆனால், நாங்கள் அதற்கும் தயாராக உள்ளோம். நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். அதிக ரன்களை இலக்காக அடிக்க நினைக்கிறோம். ஐந்து நாட்கள் ஓய்வை நன்றாக பயன்படுத்தி உள்ளோம். சில வீரர்கள் பயிற்சி எடுத்தனர். சில நாட்கள் ஓய்வு எடுத்தனர்” என்று கூறினார். 

சென்னை, மும்பை அணிகள் தலா மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. அதனால், இன்றையப் போட்டியில் அதிக பரபரப்பு இருக்கும்.