விளையாட்டு

‘We Yellove You Faf’- ட்விட்டரில் டூப்ளசிஸ் புகழ் பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்!

EllusamyKarthik

அண்மையில் முடிந்த மெகா ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தென்னாப்பிரிக்க வீரர் டூப்ளசிஸை வாங்கியது. கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார் அவர். இந்த நிலையில் ட்விட்டர் தளத்தில் அவரது புகழ் பாடியுள்ளனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள். அது இந்திய அளவில் டிரெண்டாகி உள்ளது. 

‘We Yellove You Faf’ என ட்விட்டர் தளத்தில் டிரெண்ட் செய்யப்பட்டுள்ளது. பலரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான டூப்ளசிஸின் பயணம் குறித்த படங்களை பகிர்ந்து இதனை சொல்லி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹாண்டிலில் கூட இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள டூப்ளசிஸ் மொத்தம் 2395 ரன்கள் சேர்த்துள்ளார். சென்னை அணியுடனான உறவு குறித்து டூப்ளசிஸ் ஒரு வீடியோ கூட வெளியிட்டிருந்தார்.