விளையாட்டு

ஆச்சரியங்களை நிகழ்த்துவோம்: சண்டிமால் நம்பிக்கை!

ஆச்சரியங்களை நிகழ்த்துவோம்: சண்டிமால் நம்பிக்கை!

webteam

நாக்பூர் ஆடுகளத்தில் எங்களால் சில ஆச்சரியங்களை நிகழ்த்த முடியும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் சண்டிமால் கூறினார்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2 வது டெஸ்ட் போட்டி, நாக்பூரில் இன்று தொடங்குகிறது. 

இலங்கை கேப்டன் சண்டிமால் கூறும்போது, ‘ கொல்கத்தா மைதானத்துடன் ஒப்பிடும் போது நாக்பூரில் புற்கள் அதிகம் இல்லை. பார்ப்பதற்கு, சிறந்த டெஸ்ட் ஆடுகளமாக தெரிகிறது. எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் அனுபவசாலி. இந்த ஆடுகளத்தில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறோம். இந்தியா சிறந்த அணி. அவர்களை சொந்த மண்ணில் வீழ்த்துவதோ தொடரை வெல்வதோ பெரிய சவால். ஆனால் இங்கு நிச்சயம் எங்களால் சில ஆச்சரியங்களை நிகழ்த்த முடியும். இதற்கு எங்களது திட்டங்களை களத்தில் கச்சிதமாக செயல்படுத்த வேண்டியது அவசியம். செய்தால் இந்திய அணிக்கு அழுத்தம் முடியும்’ என்றார்.