விளையாட்டு

வாவ்ரிங்கா அதிர்ச்சித் தோல்வி

webteam

இங்கிலாந்தில் நடந்துவரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார். 

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 5ம் நிலையில் உள்ள வாவ்ரிங்கா, தரநிலையில் 49ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் டேனீல் மெத்வதேவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மெத்வதேவ், 6-4, 3-6, 6-4, 6-1 என்ற கணக்கில் வென்றார். 21 வயதான மெத்வதேவ், விம்பிள்டன் தொடரில் பங்கேற்கும் மூன்றாவது போட்டி இதுவாகும். மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வாவ்ரிங்காவை வீழ்த்தி மெத்வதேவ் அசத்தியுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற பிரெஞ்சு ஓபனில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய வாவ்ரிங்கா, விம்பிள்டன் தொடரில் முதல் சுற்றில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.