விளையாட்டு

ஸ்மித் தலையை பதம் பார்த்த ஆர்ச்சர் பந்துவீச்சு

ஸ்மித் தலையை பதம் பார்த்த ஆர்ச்சர் பந்துவீச்சு

rajakannan

ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 92 ரன்கள் எடுத்து ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 258 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் பர்ன்ஸ் 53, பேர்ஸ்டோவ் 52 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மிங்ஸ், ஹாஸ்ல்வுட், நாதன் லயன் தலா மூன்று விக்கெட் சாய்த்தனர்.

பின்னர், ஆஸ்திரேலிய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸை விளையாடியது. விக்கெட்கள் ஒருபுறம் வீழ்ந்தாலும் ஸ்டீவ் ஸ்மித் நிலைத்து நின்று ஆடினார். கவாஜா மட்டும் 36 ரன்கள் எடுத்தார். கடைசி வரை போராடிய ஸ்மித் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஸ்மித் 70 ரன்கள் எடுத்திந்த போது ஆர்ச்சர் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திடீரென தடுமாறினார். அப்போது, 148 கிலோமீட்டர் வேகத்தில் வந்த பந்து ஸ்மித்தின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது. அவர் நிலை குலைந்து கீழே விழுந்தார். கொஞ்ச நேரம் ரிட்டயர் ஹட் ஆகி மீண்டும் விளையாடினார்.

8 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. அந்த அணியில் ஜேசன் ராய் 2 ரன்களில் ஆட்டமிழக்க, ரூட் கோல் டக் அவுட் ஆனார். 9 ரன்னில் இங்கிலாந்து 2 விக்கெட்டை இழந்தது.