விளையாட்டு

முதல் தரப் போட்டியில் வாசிம் ஜாபர் சாதனை!

முதல் தரப் போட்டியில் வாசிம் ஜாபர் சாதனை!

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர், முதல் தரப் போட்டியில் 18 ஆயிரம் ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஓபனிங் பேட்ஸ்மேன், வாசிம் ஜாபர். இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளிலும் 2 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள ஜாபர், இப்போது முதல் தரப் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

40 வயதாகும் அவர் கடந்த 18 வருடங்களாக மும்பை அணிக்காக விளையாடி வந்தார். இப்போது விதர்பா அணிக்காக விளையாடி வருகிறார். ரஞ்சி மற்றும் இரானி கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் குவித்துள்ள இவர், தற்போது விதர்பா மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளுக்கு இடையே நாக்பூரில் நடக்கும் போட்டியில் விளையாடி வருகிறார். 

இந்தப் போட்டியில் இன்று இரட்டை சதம் அடித்த அவர், முதல் தரப் போட்டியில் 18 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதையடுத்து திலிப் வெங்சர்கர் (17868), ஜி.ஆர்.விஸ்வநாத் (17970) ஆகியோரை முந்தியுள்ளார் ஜாபர். முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் 25,834 ரன்களுடன் முன்னிலை வகிக்கிறார்.