விளையாட்டு

“நான் சறுக்கிவிட்டால் கோலி கோபப்படுவார், ஆனால் சச்சின்...” - எடைபோட்ட வாசிம் அக்ரம்

“நான் சறுக்கிவிட்டால் கோலி கோபப்படுவார், ஆனால் சச்சின்...” - எடைபோட்ட வாசிம் அக்ரம்

webteam
'சச்சின் டெண்டுல்கரையும் விராட் கோலியையும் ஒப்பிட்டு வாசிம் அக்ரம் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். 
 
 
இந்திய கிரிக்கெட் உலகைப் பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர் ஒரு கடவுள். அவரது ரசிகர்கள் அவரை அப்படித்தான் கொண்டாடுகிறார்கள். அவருக்குப் பின் பலர் வந்துவிட்டாலும் அவரை இன்னும் ஜாம்பவானாகவே பலரும் மதித்துப் போற்றுகின்றனர்.  ஆனால் கிரிக்கெட் உலகைப் பொறுத்தவரை யார் பெரியவர் என்பது குறித்த சர்ச்சை அவ்வப்போது எழுந்து கொண்டேதான் இருக்கிறது. தோனி ரசிகர்கள் பிற வீரர்களை வம்புக்கு இழுப்பதும் விராட் ரசிகர்கள் வேறு சில வீரர்களை விமர்சிப்பது தொடர் கதையாகவே உள்ளது.
 
 
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் இந்திய வீரர்களான சச்சின் டெண்டுல்கரையும் விராட் கோலியையும் ஒப்பிட்டு சில விஷயங்களைப் பேசியுள்ளார். அக்ரம் தனது யூடியூப் சேனலில் ஆகாஷ் சோப்ராவுக்கு அளித்த பேட்டியில் , “சச்சினுடன் ஒப்பிடும்போது விராட் கோலி மாடர்ன் ஆனவர். இருவரும் வெவ்வேறு விதமான வீரர்கள்.  ஒரு நபராக, ஒரு பேட்ஸ்மேனாக அவர் மிகவும் ஆக்ரோஷமானவர். நேர்மறையானவர். சச்சின் அமைதியாகவும் இன்னும் ஆக்ரோஷமாகவும் இருப்பார். மேலும் வித்தியாசமான உடல் மொழி உடையவர். எனவே ஒரு பந்து வீச்சாளராக நீங்கள் அவரை அதிகம் புரிந்து கொள்ளலாம்”என்று கூறியுள்ளார்.
 
 
தொடர்ந்து பேசிய அவர், "நான் அவரை முயற்சித்து சறுக்கிவிட்டால், அவர் இன்னும் உறுதியாக இருப்பார். இதை சச்சினுக்கு அறிவார். இது எனது புரிதல். நான் தவறாகக்கூடச் சொல்லலாம். ஒருவேளை  நான் கோலியை சறுக்கி விட்டால் அவர் தனது மனநிலையை இழப்பார். எனவே, ஒரு பேட்ஸ்மேன் கோபப்படும்போது அவர் உங்களைத் தாக்குவார். அப்போதுதான் அவரை வெளியேற்றுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கும்” என்று கூறியுள்ளார்.