ronaldo reuters
விளையாட்டு

அவமானப்படுத்தப்பட்டாரா ரொனால்டோ..? போர்ச்சுகல் பயிற்சி முகாமிலிருந்து வெளியேறியதால் அதிர்ச்சி!

போர்ச்சுக்கல் என்ற நாட்டையே தன் கால்பந்து திறனால் உலகறிச்செய்த ரொனால்டோவுக்கு தொடர்ந்து அவமதிப்பு ஏற்பட்டுவருவதாக ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Rishan Vengai

போர்ச்சுகல் பயிற்சி முகாமிலிருந்து ரொனால்டோ வெளியேறியதன் பின்னணியில் அணித்தேர்வு மற்றும் பங்கு குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல். இது அவரது கால்பந்து எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பயிற்சியாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பயிற்சி முகாமிலிருந்து வெளியேறினார், போர்ச்சுகல் அணி விளையாடவிருக்கும் நேஷனல் லீக் போட்டிகளில் தனது பங்கு மற்றும் அணித்தேர்வு குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடே இதற்கு காரணம் எனத் தெரிகிறது. தான் வெளியேறியது குறித்த முழு உண்மையையும் உரிய நேரத்தில் வெளியிடுவதாகவும் சக வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் ரொனால்டோ தெரிவித்தார். எனினும் ரொனால்டோவின் கால்பந்து எதிர்காலம் குறித்த விவாதங்களையும் தொடங்கிவைத்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போதே ரொனால்டோவை போர்ச்சுக்கல் அணி சரியாக பயன்படுத்தவில்லை. அப்போதைய பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் முக்கியமான நாக் அவுட் போட்டியில் ரொனால்டோவை பெஞ்சில் அமரவைத்தார். அதுமட்டுமில்லாமல் லீக் போட்டியில் பாதியிலேயே ரொனால்டோவை வெளியேற்றினார். அப்போது மைதானத்திலேயே ரொனால்டோ தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

ronaldo

அதைத்தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற 2026 உலகக்கோப்பையில் சிறந்த வீரர்களை கொண்டிருந்த போதும் ரொனால்டோவின் அணி ரவுண்ட் 16-ல் தோற்று வெளியேறியது. அர்ஜெண்டினாவை விட போர்ச்சுக்கல்லில் தலைசிறந்த வீரர்கள் இருந்தப்போதிலும், மெஸ்ஸிக்காக அர்ஜெண்டினா அணி வீரர்கள் செய்ததை, ரொனால்டோவுக்காக போர்ச்சுக்கல் அணி வீரர்கள் செய்யவில்லை என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர். தன் கால்பந்து திறமையால் போர்ச்சுக்கல்லை உலகறியச்செய்த கிறிஸ்டியானா ரொனோல்டோவுக்கும், அவருடைய வெற்றிக்கும் பதிலுக்கு அந்த அணி செய்யவில்லை என்பது வேதனையாக பார்க்கப்படும் நிலையில், தற்போது பயிற்சி அமர்வில் இருந்து ரொனால்டோ வெளியேறியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

ronaldo

அடுத்த உலகக்கோப்பை போர்ச்சுக்கல்லில் நடைபெறவிருக்கும் நிலையில், ரொனால்டோ அதில் விளையாடுவாரா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் தற்போது எழுந்திருக்கும் பிரச்னை உலகக்கோப்பை இல்லாமலேயே ரொனால்டோவின் கால்பந்து பயணம் முடிவுறுமோ என்ற அச்சத்தை ரசிகர்களுக்கு எழுப்பியுள்ளது.