விளையாட்டு

இருங்க! யார் அடிச்சா? அவரா!? ஒரே ஓவரில் 22 ரன்கள் அடித்த டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் புஜாரா!

PT

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ராயல் லண்டன் ஒன்டே கப் 2022 தொடரில் பங்குபெற்று சஸ்ஸக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் இந்திய கிரிக்கெட் வீரர் சட்டீஸ்வர் புஜாரா. இந்நிலையில் வார்விக்சைர் அணிக்கும் சஸ்ஸக்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டி ஒன்றில் தன்னுடைய அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார் புஜாரா. 7 பவுண்டிரிகள், 2 சிக்சர்கள் அடித்த அவர் வெறும் 79 பந்துகளில் 107 ரன்கள் அடித்து அனைவரையும் மிரட்டியுள்ளார். டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் என்றே அறியப்பட்ட புஜாரா இப்படி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் லியாம் நார்வெல் வீசிய 45வது ஓவரில், 3 பவுண்டரிகள், இரு 2 ரன் ஓட்டங்கள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்த புஜாரா அந்த ஒரு ஓவரில் மட்டும் 22 ரன்கள் அடித்து மிரட்டியுள்ளார்.