விளையாட்டு

அஸ்வினா? கார்த்திக்கா? இன்றைய ஆட்டத்தில் தமிழர்களின் ஆதரவு யாருக்கு..?

அஸ்வினா? கார்த்திக்கா? இன்றைய ஆட்டத்தில் தமிழர்களின் ஆதரவு யாருக்கு..?

webteam

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கிய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்து விளையாடி வருகிறது. ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி

பந்து வீச்சை தேர்வு செய்தது.

பஞ்சாப் அணியில் மேகித் சர்மா நீக்கப்பட்டு அங்கித் ராஜ்பூட் சேர்க்கப்பட்டுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இவ்விரு அணிகளும் 21 முறை நேருக்குநேர் மோதி 14 முறை கொல்கத்தா அணியும், 7 முறை பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளன. கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணியின் கேப்டன்கள் இருவருமே தமிழர்கள் என்பதால் இன்றைய போட்டியில் தமிழ்நாடு ரசிகர்களின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அணி விவரம்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சுனில் நரேன், கிறிஸ் லயன், ராபின் உத்தப்பா, நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரசல், கில், டாம் குர்ரன், பியூஷ் சாவ்லா, ஷிவம் மாவி, குல்தீப் யாதவ்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில், பயங்க் அகர்வால், கருண் நாயர், ஆரோன் ஃபிஞ்ச், யுவராஜ் சிங், அஸ்வின், ஆண்ட்ரூ டை, பரிந்தர் சரண், அங்கித் ராஜ்பூட், முஜீப்-உர்-ரஹ்மான்