விளையாட்டு

சிங்க்ஃபீல்ட் சர்வதேச செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் 7-வது சுற்றில் வெற்றி

சிங்க்ஃபீல்ட் சர்வதேச செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் 7-வது சுற்றில் வெற்றி

webteam

சிங்க்ஃபீல்ட் சர்வதேச செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் 7-வது சுற்றில் வெற்றி அடைந்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சிங்க்ஃபீல்ட் சர்வதேச செஸ் தொடரில், இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஏழாவது சுற்றில் வெற்றி பெற்றார். ஏழாவது சுற்றில் ரஷ்ய கிராண்ட்மாஸ்டர் நெம்போம்நியாச்சியை ஆனந்த் தோற்கடித்தார். 

கருப்பு காய்களுடன் விளையாடிய ஆனந்த், 40-வது நகர்த்தலில் வெற்றியை ‌வசப்படுத்தினார். இந்த வெற்றியை அடுத்து பிரான்சின் வாச்சியார் லாகிரேவ், ஆர்மேனியாவின் லெவன் அரோனியன் ஆகியோருடன் புள்ளிகள் பட்டியலில் ஆனந்த் முதலிடத்திற்கு முன்னேறினார். இன்னும் 2 சுற்றுகள் எஞ்சியுள்ளன.