விளையாட்டு

கோட்லா மைதான கேட்டுக்கு சேவாக் பெயர்!

கோட்லா மைதான கேட்டுக்கு சேவாக் பெயர்!

webteam

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தின் நுழைவு வாயிலுக்கு வீரேந்திர சேவாக் பெயர் வைக்கப்பட இருக்கிறது. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக். டெல்லியை சேர்ந்த இவர், டெஸ்ட் போட்டியில் மூன்று சதம் அடித்த இந்திய வீரர்.  ஒரு நாள் போட்டியில் இரட்டைச்சதம் உட்பட பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சேவாக்கை கவுரவிக்கும் விதமாக, அவர் பெயரை, டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தின் நுழைவு வாயிலுக்கு வைக்க டெல்லி, கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
‘கிரிக்கெட்டுக்கு வீரேந்திர சேவாக் அளித்த பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, கோட்லா மைதானத்தின் இரண்டாவது கேட்டுக்கு அவரது பெயரை வைக்க முடிவு செய்துள்ளோம். இதே போன்று டெல்லி கிரிக்கெட்டுக்கு அதிக பங்களிப்பை செய்துள்ள மற்ற வீரர்களையும் கவுரவிக்க இருக்கிறோம்’ என்றார் டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகி, ஓய்வு பெற்ற நீதிபதி விக்ரம்ஜித் சென்.

நவம்பர் 1-ம் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி டெல்லி கோட்லா மைதானத்தில் நடக்கிறது. அதற்கு முந்தைய நாளான வரும் 31-ம் தேதி, இதற்கான விழா நடக்கிறது.