கடந்த 14 ஐபிஎல் தொடர்களிலும் செய்யாத தவறுகளை நடப்பு ஒரே தொடரில் விராட் கோலி செய்திருப்பதாக வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 15வது சீசனில் 2வது தகுதிச் சுற்று வரை வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ராஜஸ்தானிடம் தோற்று தொடரை விட்டு வெளியேறியது. முக்கியமான இந்தப் போட்டியில் விராட் கோலி வெறும் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டரை வருடங்களாக சதம் அடிக்காத விராட் கோலி நடப்பு ஐபிஎல் சீசனிலும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.
16 ஆட்டங்களில் இரண்டு அரைசதங்கள் உட்பட 341 ரன்கள் மட்டுமே கோலி எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 22.73. பெரும்பாலான ஆட்டங்களில் அவர் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கியே குறைவான ரன்களை எடுத்துள்ளார். இதன் மூலம் 2010ஆம் ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் சீசனில் விராட் கோலி அடித்த 3வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். அவர் அடித்த இரண்டு அரைசதமும் நடப்பு சீசனில் வலுவான அணியாக விளங்கும் குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிராவை என்பது சற்றே ஆறுதல்.
இந்நிலையில், விராட் கோலியின் இந்த ஆட்டத்திறன் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் வீரேந்திர ஷேவாக், நினைத்துப் பார்க்க முடியாத வகையில் எல்லாம் விக்கெட்டை பறிகொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாம்: தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!