விளையாட்டு

அழகை அழகுடன் ரசிக்கும் போது இன்னும் அழகு: காதல் மழையில் கோலி..!

அழகை அழகுடன் ரசிக்கும் போது இன்னும் அழகு: காதல் மழையில் கோலி..!

webteam

அனுஷ்காவுடன் இருக்கும்போது கேப் டவுன் இன்னும் அழகாக தெரிகிறது என விராட் கோலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. காதலர்களாக வலம் வந்த இவர்கள் கடந்த ஆண்டின் இறுதியில் கரம் கோர்த்தனர். இந்த நிலையில் இந்திய அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் டெஸ்ட், ஒருநாள் உள்ளிட்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. இந்தப்போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் கேப்டன் கோலி தனது மனைவியுடன் சென்றுள்ளார்.

தென் ஆப்ரிக்காவின் தலைநகர் கேப் டவுனில் உள்ள கடற்கரையில் தனது காதல் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கோலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ள வாசகம்தான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த ட்வீட்டில் கேப் டவுன் அழகான இடம், அனுஷ்காவுடன் இருக்கும்போது இன்னும் அழகாக தெரிகிறது என காதல் மழையை பொழிந்துள்ளார்.