விளையாட்டு

ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்த விராட் கோலி! இன்னும் ஒரு சாதனை பாக்கி இருக்கிறது!!

ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்த விராட் கோலி! இன்னும் ஒரு சாதனை பாக்கி இருக்கிறது!!

ச. முத்துகிருஷ்ணன்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதம் விளாசி புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். முன்னதாக 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி வங்கதேசம் அணிக்கெதிராக கோலி தனது 70வது சதத்தை விளாசியிருந்தார். பின்னர் தற்போதுதான் 1021 நாட்களுக்கு பின் தனது 71வது சதத்தை எட்டிப் பிடித்து சாதனை படைத்துள்ளார் கோலி.

அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் 3 ஆம் இடத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்தார் கோலி. இந்த சதத்தின் மூலம் 2வது இடத்தில் இருக்கும் ரிக்கி பாண்டிங் சாதனையை கோலி சமன் செய்தார். 560 போட்டிகளில் 668 இன்னிங்சில் பங்கேற்ற பின் 71 சதங்களை ரிக்கி பாண்டிங் விளாசியிருந்த நிலையில், 468 போட்டிகளில் 522 வது இன்னிங்சிலேயே 71வது சதத்தை விளாசி அசத்தியுள்ளார் கோலி. தற்போது இருவரும் 2ஆம் இடத்தை பகிர்ந்து வரும் நிலையில் இன்னும் ஒரு சதத்தை கோலி விளாசினால் தனியாளாக 2 ஆம் இடத்தில் நீடிப்பார்.

இன்னும் ஒரு சாதனை பாக்கி இருக்கிறது கோலி!

2ஆம் இடத்திற்கு நடைபெறும் இந்த களேபரத்தில் முதலிடத்தில் இருப்பவரின் சாதனையை நாம் மட்டுமல்ல., கோலியும் மறந்துவிடக்கூடாது! அது சதத்தில் சதம் கண்ட சச்சின் டெண்டுல்கரின் சாதனை. 664 போட்டிகளில் 782 இன்னிங்சில் விளையாடிய பின் சச்சின் இந்த இமாலய இலக்கை எட்டினார். கோலியும் இந்த இலக்கை எட்டிப்பிடிக்க இன்னும் 29 சதங்கள் தேவை!