விளையாட்டு

விராத் மெழுகு சிலை, ’செல்ஃபி’ ரசிகர்களால் திடீர் சேதம்!

webteam

டெல்லியில் உள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் மெழுகுச் சிலை திடீரென சேதமடைந்தது.

பிரபலமானவர்களின் மெழுகு சிலையை உருவாக்கி, தங்கள் அருங்காட்சியகத்தில் வைத்து வருகிறது மேடம் டுஸாட்ஸ். இந்த அருங்காட்சியகம் இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், பாடகர்கள், அரசியல்தலைவர்களின் மெழுகு சிலைகள் இடம்பெற்றுள்ளன. 

டெல்லியில் உள்ள இந்த மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் மெழுகு சிலை கடந்த புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி சீருடையுடன் கையில் பேட்டை வைத்து, பந்தை எதிர்கொள்ளும் விதத் தில் அந்தச் சிலை அமைக்கப்பட்டிருந்தது. 

இந்த சிலையை ஏராளமானவர்கள் பார்த்துவருகின்றனர். ரசிகர்கள் பலர் அந்தச் சிலையுடன் செல்ஃபி எடுக்கின்றனர். அப்போது சிலையின் காது பகுதி சேதமடைந்துள்ளது. பின்னர் அதை உடனடியாக சரி செய்தனர். ‘உண்மைதான். ரசிகர்களின் ஆர்வத்தால் அது சேதமடைந்திருந் தது. உடனடியாக அதை சரி செய்து, அந்த இடத்திலேயே சிலையை நிறுவியுள்ளோம். ரசிகர்கள் இனி, எப்போது வேண்டுமானாலும் புகைப் படங்களும் செல்ஃபியும் எடுத்துக்கொள்ளலாம்’ என்ற மேடம் டுஸாட்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கு ஏற்கனவே, டெவிட் பெக்காம், மெஸ்சி, கபில்தேவ், உசேன் போல்ட் ஆகியோரின் மெழுகு சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.