விளையாட்டு

ஒவ்வொரு போட்டியையும் வெல்வதே இலக்கு... விராட் கோலி பளீச்

ஒவ்வொரு போட்டியையும் வெல்வதே இலக்கு... விராட் கோலி பளீச்

Rasus

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறுவதே இலக்கு என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்துள்ள அணிகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் ஜூன் ஒன்றில் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து செல்வதற்கு முன்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, விமர்சனங்களுக்கு பதிலளிப்பதற்காக போட்டிகளில் விளையாடுவதில்லை. மாறாக எனது நாட்டுக்கு வெற்றியைப் பரிசளிப்பதற்காகவே விளையாடுகிறேன். சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் வெல்வதே எங்கள் இலக்கு. ஒரு போட்டியில் கூட தோற்காமல் கோப்பையை தக்கவைப்பதே எங்கள் நோக்கம் என்று கூறினார்.

கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்த கேள்விக்குப் பதிலளித்த கோலி, இரு நாடுகள் இடையிலான போட்டி என்பது எப்போதுமே ஆர்வத்தைத் தூண்டுவதாக இருப்பதுண்டு. ஆனால், அதுவும் மற்றொரு போட்டியே என்று தெரிவித்தார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா, தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஜூன் 4ல் சந்திக்கிறது.