விளையாட்டு

ஆப்கான் டெஸ்ட்டில் இருந்து விராத் கோலி விலகல்!

ஆப்கான் டெஸ்ட்டில் இருந்து விராத் கோலி விலகல்!

webteam

இங்கிலாந்தில் நடக்க இருக்கும் தொடருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருட்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விராத் கோலி, விலகுகிறார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்தை வழங்கியது. இதையடுத்து அந்த அணி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி, ஜூன் மாதம் 14-ம் தேதி,  பெங்களூரில் நடக்கிறது. இதற்கிடையே இந்தப் போட்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி விலகுகிறார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி,  3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் இருந்து விராத் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதில் ரோகித் அல்லது ரஹானே கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது.