விளையாட்டு

போர்ட் எலிசபெத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பாரம்பரிய வரவேற்பு!

போர்ட் எலிசபெத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பாரம்பரிய வரவேற்பு!

webteam

ஐந்தாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடக்கும் போர்ட் எலிசபெத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. டிரம்ஸ் இசை முழங்க, பாரம்பரிய பாடல் ஒலிக்க வீரர்களை வரவேற்கப்பட்டனர். இதை பிசிசிஐ தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, நான்காவது ஒரு நாள் தொடரில் தோற்றது. இந்நிலையில் ஐந்தாவது ஒரு நாள் போட்டி, போர்ட் எலிசபெத்தில் நாளை நடக்கிறது. 

இதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் அங்கு நேற்று வந்தனர். அவர்கள் தங்கும் நட்சத்திர ஓட்டலுக்கு வெளியே தென்னாப்பிரிக்காவின் பாரம்பரிய முறைப்படி இந்திய வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சேஹல், அந்த இசைக்கலைஞர்களை செல்போனில் புகைப்படம் எடுத்தார். பாண்ட்யா மெதுவான ஒரு நடனத்தைப் போட்டுவிட்டு உள்ளே செல்கிறார்.