இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெருவில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்தத் தொடரில் இவருக்குப் பதிலாக ரோகித் சர்மா கேப்டன் பதவியில் செயல்பட்டார். வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மீண்டும் களமிறங்க உள்ளார். இதற்காக தற்போது இவர் இந்தூரில் உள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி தற்போது சிறுவர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடி மகிழும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் விராட் கோலி சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு பின்னர் அவர்களிடம் பேட்டை கொடுக்காமல் ஓடும் வகையிலும் விளைட்டுக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இவர் ஒரு படப்பிடிப்பிற்காக இந்தூர் நகரின் பிச்சோலி மர்தானா (Bicholi Mardana) பகுதி சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இதேபோல சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெருவில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.