விளையாட்டு

விராத் கோலியைக் குறை கூறுவது சரியாகாது... அனுராக் தாக்குர் கருத்து

விராத் கோலியைக் குறை கூறுவது சரியாகாது... அனுராக் தாக்குர் கருத்து

webteam

அனில் கும்ப்ளே பதவி விலகல் விவகாரத்தில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியை குறைகூறுவது சரியாகாது என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்குர் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பேசிய அவர், இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட போது வீரர்கள் யாருமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அனில் கும்ப்ளே பதவி விலகல் தொடர்பாக விராத் கோலியைக் குறைகூறுவது சரியாகாது. இதுதொடர்பான வாதங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அடுத்த பத்தாண்டுகளில் இந்திய கிரிக்கெட்டை புதிய உயரத்துக்கு எடுத்துச் செல்லும் திறமை விராத் கோலிக்கு உண்டு. அனில் கும்ப்ளே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு 7 முதல் 8 மாதங்கள் வரை பிசிசிஐ அமைப்பை நாங்கள் நிர்வகித்தோம். அப்போது கேப்டன் - பயிற்சியாளர் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக ஒரு தகவலும் வெளிவரவில்லை. இப்போது வெளிவருகிறது என்றால், தற்போதைய பிசிசிஐ நிர்வாகம் என்ன செய்துகொண்டிருக்கிறது என்றும் அனுராக் தாக்குர் கேள்வி எழுப்பியுள்ளார்.