விளையாட்டு

’ஏன் தேர்வு செய்தோம் என்பதை நிரூபித்துவிட்டார்’ : விஹாரியை புகழும் விராத்

’ஏன் தேர்வு செய்தோம் என்பதை நிரூபித்துவிட்டார்’ : விஹாரியை புகழும் விராத்

webteam

ஹனுமா விஹாரி, தான் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்துவிட்டார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார்.

இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடியது. மூன்று விதமான போட்டிகளின் தொடரையும் வென்று ஒயிட் வாஷ் செய்ததுள்ளது இந்திய அணி.  அந்த அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியை நேற்று வென்றதன் மூலம், அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் விராத் கோலி.

இந்நிலையில், நேற்றைய வெற்றிக்குப் பின் அவர் பேசும்போது, ’’இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத் தினார்கள். ஹனுமா விஹாரி அருமையாக ஆடினார். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அதை திருத்தி அவர் ஆடியவிதம் அருமையானது. அவர் ஆடும்போது, டிரெஸ்சிங் அறையில் அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தோம். அவரது ஆட்டம் டாப் கிளாஸ். ஆடும் லெவனில் அவர் ஏன் சேர்க்கப்பட்டார் என்பதை நிரூபித்துவிட்டார். மயங்க் அகர்வால், இஷாந்த்தின் அரை சதம், ரஹானேவின் பொறுப்பான ஆட்டம் ஆகியவை இந்த வெற்றிக்கு காரணம்.

அதிக டெஸ்ட் வெற்றியை பெற்ற இந்திய கேப்டன் ஆனது பற்றி கேட்கிறார்கள். கேப்டன்சி என்பது பெயருக்கு முன்னால் இருக்கிற 'C’ தான். இது கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி. இஷாந்த், ஷமி ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர்கள். ஜடேஜாவும் அருமையாகச் செயல்பட்டார். 

வெஸ்ட் இண்டீஸ் அணியும் சிறப்பாகப் போராடியது. அவர்கள் எந்த ஏரியாவில் முன்னேற வேண்டும் என்பதை தெரிந்தி ருப்பார்கள். பந்துவீச்சில் அந்த அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்களுக்கு போதுமான ரன்கள் கிடைத்தால், டெஸ்ட்டில்  கடும் சவாலாக இருப்பார்கள்’ என்றார்.