விளையாட்டு

ஐசிசி தரப்பட்டியலில் 3வது இடத்தில் விராட் கோஹ்லி

ஐசிசி தரப்பட்டியலில் 3வது இடத்தில் விராட் கோஹ்லி

webteam

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன்களுக்கான தரப்பட்டியலில் இந்திய அணிக் கேப்டன் விராட் கோஹ்லி மூன்றாவது இடத்தில் தொடர்கிறார்.

852 புள்ளிகளுடன் கோஹ்லி மூன்றாவது இடத்தில் உள்ளார். கோஹ்லியை தவிர்த்து இந்திய வீரர்கள் வேறு யாரும் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறவில்லை. 874 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்க அணிக் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் முதலிடத்திலும், 871 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.