விளையாட்டு

நான் ஏன் ரோகித் சர்மாவை அணியில் சேர்க்கவில்லை ? கேப்டன் கோலி விளக்கம்

நான் ஏன் ரோகித் சர்மாவை அணியில் சேர்க்கவில்லை ? கேப்டன் கோலி விளக்கம்

webteam

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் ஷர்மாவிற்கு பதிலாக விஹாரியை சேர்த்தற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். 

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் ஷர்மா மற்றும் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. அணி நிர்வாகத்தின் இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் இந்திய அணியின் தேர்வு குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “விஹாரி ஒரு நடுகள ஆட்டக்காரர் மற்றும் அவர் ஒரு பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர். எனவே ஓவர்கள் குறைவாக வீசப்பட்டிற்கும் போது இவர் பந்துவீசுவார். ஆகவே தான் இவரை அணியில் எடுத்தோம். மேலும் அணி தேர்வில் சில விமர்சனங்கள் வருவது சகஜம் தான். ஆனால் அணி தேர்வு என்பது சுழ்நிலையை பொறுத்து தான் என்பதை அவர்கள் உணர்வார்கள்.

அத்துடன் அணியின் கேப்டனாக நான் சில முடிவுகளை எடுக்கிறேன். இந்த முடிவுகள் வெற்றிப் பெறுவது என்னுடைய கையில் மட்டுமே இல்லை. மற்ற வீரர்களின் பங்கும் இதில் தேவைப்படுகிறது. எனவே அணி வெற்றிப் பெறும் போது அதற்கு மொத்த வீரர்களின் பங்களிப்பு தான் முக்கிய காரணம் ஆகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு இந்திய கேப்டன் விராட் கோலி மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.