விளையாட்டு

கோலியின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா ?

கோலியின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா ?

அமெரிக்காவின் போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் உலகளவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 83 ஆம் இடத்தை பிடித்துள்ளார். அதில் விராட் கோலி ஆண்டுக்கு ரூ.160.95 கோடி வரை வருமானம் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இந்திய அணியின் தவிர்க்க முடியாது வீரர் விராட் கோலி. இளம் வயதில் சச்சினுக்கு அடுத்து அதிகப்படியான சாதனைகளை படைத்துள்ளார். இப்போது கிரிக்கெட் மைதானத்தை தாண்டி ஆண்டுக்கு அதிகப்படியான வருமானத்தை ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார் கோலி.

போபர்ஸ் வெளியிட்ட இந்தப் பட்டியலில் முதலிடத்தை பிரபல குத்துச்சண்டை வீரரான பிளாய்டு மேவெதர் முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் கடந்த ஆண்டு ரூ.1,900 கோடி சம்பாதித்து இருக்கிறார். மேலும் கால்பந்து வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயனல் மெஸ்சி, கூடைப்பந்து வீரர் லீபீரன் ஜேம்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.