விளையாட்டு

'தோனி நரம்பில் பனி உருகி ஓடுகிறது; அதனால்தான் அவர் கூல் கேப்டன்' - ஷேன் வாட்சன்

JustinDurai

'தோனியின் நரம்பில் பனி உருகி ஓடுகிறது, அதனால் தான் இவ்வளவு கூலாக இருக்கிறார்' என்று தெரிவித்துள்ளார் ஷேன் வாட்சன்.

விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனியின் கேப்டன்சி செயல்பாடுகள் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன். அதில், ''விராட் கோலி விராட் ஒரு தலைவராக, நம்ப முடியாத விஷயங்களை செய்வார். மேலும் வீரர்களை உற்சாகப்படுத்துவதில் கோலி மிகுந்த வல்லவர். என்னைப் பொறுத்தவரை, விராட் கோலி ஒரு சூப்பர்மேன் என்று நான் நம்புகிறேன், தன்னை சுற்றியுள்ள வீரர்களின் திறமையை வெளிக்கொண்டுவந்து அதை எப்படி பயன்படுத்துவது என்பது கோலிக்கு நன்கு தெரியும். ஐபிஎல்லில் பெங்களூரு அணியில் விராட் கோலி தலைமைக்கு கீழ் பணியாற்றியது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது.

தோனியை பொறுத்தவரை அவர் நரம்பில் பனி உருகி ஓடுகிறது, அதனால் தான் இவ்வளவு கூலாக அவரால் இருக்க முடிகிறது. அணியில் இருந்து அழுத்தத்தை நீக்குவதில் அவரது திறமை அபரிமிதமானது. மேலும் தோனி அவரது அணி வீரர்களை முழுவதுமாக நம்புவதால் அவரால் அவரது அணியை நல்ல முறையில் கொண்டுசெல்ல முடிகிறது'' என்றார்.

மேலும் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா குறித்து ஷேன் வாட்சன். பேசுகையில், அவர் மிகவும் இயல்பான மற்றும் எளிமையான கேப்டன் மற்றும் அவர் மும்பை அணியை வழிநடத்தும் அவரின் செயல்பாடு நம்ப முடியாத வகையில் சிறப்பாக அமைத்துள்ளது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இலங்கைக்கு எதிரான முதலாவது டி20 போட்டி - வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?