சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது காதலியான அனுஷ்கா சர்மாவை டிசம்பர் 11 ஆம் தேதி கரம் பிடித்தார். இத்தாலியில் நடைபெற்ற இவர்களின் திருமணத்திற்கு, கிரிக்கெட் நட்சத்திரங்கள், பாலிவுட் பிரபலங்கள், நண்பர்கள் என அனைவரும் தங்களின் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். திருமணம் ஆன நாள் முதல் தற்போது வரை வலைத்தளங்களில் இந்த ஜோடிகள் குறித்த செய்திகளுக்கு பஞ்சமில்லை. திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும், எடுத்துகொள்ளும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் அதிகம் பரவி வருகிறது.
இதனைத்தொடர்ந்து, தற்போது அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், திருமணத்திற்கு பிறகு, தம்பதிகள் இருவரும் தங்களின் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் வெஸ்டர்ன் உடையில் காட்சியளிக்கும் விராட் மற்றும் அனுஷ்கா ஜோடி வித்யாசமான போஸ்களை அளித்துள்ளனர். மேலும், நட்சத்திர வீரான கோலி தனது மனைவியின் அருகில் அமர்ந்து கொண்டு விதவிதமான முறையில் முகபாவனைகளை மாற்றுகிறார். இதுவரை வெளிவந்த புகைப்படங்களிலே இந்த புகைப்படங்களில் விராட் மற்றும் அனுஷ்கா ஜோடி மிக அழகாக காட்சியளிப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.