ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கவுரமிக்கதாகக் கூறப்படும் இந்த ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது.
பீல்டிங்கின்போது ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர் காயமடைந்தார். இதையடுத்து மேக்ஸ்வெல் அணிக்கு அழைக்கப்பட்டார். இதே போல ஷான் மார்சும் காயத்தில் சிக்கினார். இருந்தும் அவர்கள் இருவரும் ஆடும் லெவனில் தொடர்கின்றனர். போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தொடங்கியது. அதன்படி, குக்கும் ஸ்டோன்மேனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 2 ரன் எடுத்திருந்த நிலையில் குக் விக்கெட்டை வீழ்த்தினார் ஸ்டார்க். இதையடுத்து வின்ஸ் களமிறங்கி ஆடிவருகிறார். 29 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்துள்ளது.