இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் மூன்று தமிழக வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இந்தியா-இலங்கை-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் மற்றும் விஜய் சங்கர் ஆகிய மூன்று தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில், விஜய் சங்கருக்கு அறிமுக சர்வதேச போட்டி ஆகும்.
தமிழக ரஞ்சியில் சிறப்பாக விளையாடி போதும் நீண்ட நாட்களாக அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது. 15 பேர் கொண்ட அணியில் அவர் பல முறை தேர்வு செய்யப்பட்ட போதும், 11 பேர் கொண்ட ஆடும் அணியில் வாய்ப்பு கிட்டவில்லை. முதல் தர போட்டிகளில் விஜய் சங்கரின் சராசரி, 49.17. திருநெல்வேலியில் பிறந்த விஜய் சங்கர், ஐபிஎல்-லில் சன் ரைசர்ஸ் அணிக்காக ஆடிவருகிறார். இவர் சிறந்த பீல்டரும் கூட.