விளையாட்டு

கிரிக்கெட் போட்டியை காண ஓவல் மைதானம் சென்ற விஜய் மல்லையா

கிரிக்கெட் போட்டியை காண ஓவல் மைதானம் சென்ற விஜய் மல்லையா

Rasus

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா உலகக் கோப்பை கிரிக்கெட்டை காண போட்டி நடைபெறும் ஓவல் மைதானம் சென்றுள்ளார்.

இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் 109 பந்துகளில் 117 ரன்களில் எடுத்து ஆட்டமிழந்தார். 40 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்து இந்திய அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.

இதனிடையே இந்தப் போட்டியை காண பிரபல தொழிலதிபரும் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கட‌ன் ஏய்ப்பு வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பிய விஜய் மல்லையா, ஓவல் மைதானம் சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் இந்திய - ஆஸ்திரேலிய போட்டியைக் காண வந்துள்ளதாக தெரிவித்தார். மகன் சித்தார்த்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு தப்பிய அவரை இந்தியா அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.