விளையாட்டு

துணைக் கேப்டன் பதவி மிகப்பெரிய கவுரவம்: ரோகித் ஷர்மா

துணைக் கேப்டன் பதவி மிகப்பெரிய கவுரவம்: ரோகித் ஷர்மா

Rasus

துணைக் கேப்டன் பதவி தனக்கு மிகப்பெரிய கவுரவம் என ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றது. அடுத்து ஒருநாள் மற்றும் டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இலங்கை அணியுடனான ஒருநாள் போட்டி தொடரில் துணைக் கேப்டனாக ரோகித் ஷர்மாவை நியமித்து இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய ரோகித் ஷர்மா, “துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டது எனக்கு மிகப்பெரிய கவுரவம். கடந்த 10 வருடங்களுக்கு முன் இந்திய அணிக்காக எப்படியாவது விளையாட வேண்டும் என நினைத்தேன். இப்போது எதையும் நான் ஆழ்ந்து யோசிப்பதில்லை. வாழ்க்கையில் அந்தந்த நேரங்களில் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்துச் செல்கிறேன். கடந்த 5 வருடங்கள் உண்மையிலே மிகச்சிறந்த வருடங்களாக உள்ளன. அது மீண்டும் தொடர வேண்டும் என கருதுகிறேன். எனக்கு கொடுக்கப்பட்ட இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம்” எனக் கூறினார்.

இலங்கையுடனான முதல் ஒரு நாள் போட்டி ஆகஸ்ட் 20 தேதி தொடங்க உள்ளது.