ஜமைக்காவைச் சேர்ந்த தடகள வேகம், உசேன் போல்ட், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு அதிவேக ஓட்டத்திற்கான பயிற்சி அளித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, வியாழக்கிழமை (23 ஆம் தேதி) பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள், விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடுவதற்கு, உசேன் போல்ட் பயிற்சி அளித்தார்.
இந்தப் பயிற்சியில் மேக்ஸ்வெல், ஆரோன் பின்ச், ஆஸ்டன் அகர், பீட்டர் ஹேண்ட்கோம்ப் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்றனர். அப்போது வேகமாக ஒடுவதற்கான நுணுக்கங்களை போல்ட் கற்றுக்கொடுத்தார். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர்களுடன் உசேன் போல்ட் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். சர்வதேச தடகளப் போட்டிகளில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வு பெற்ற உசேன் போல்ட், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.