விளையாட்டு

யுஎஸ் ஓபன் டென்னிஸ் - அரையிறுதியில் ஜெர்மனியின் ஜுவரேவ்

EllusamyKarthik

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ஆண்கள் பிரிவு அரையிறுதி ஆட்டத்திற்கு ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜுவரேவ் தகுதி பெற்றுள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் 4ஆம் நிலை வீரர் ஜுவரேவ், தென்னாப்ரிக்காவின் லாயிட் ஹாரிசை 7 - 6, 6 - 3, 6 - 4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். ஜுவரேவ் தொடர்ச்சியாக வெல்லும் 16ஆவது போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு காலிறுதியில் முன்னணி வீரர் ஜோகோவிச், இத்தாலியின் மேட்டியோ பெரட்டினியுடன் மோதுகிறார். இதில் வெல்பவருடன் ஜுவரேவ் அரையிறுதியில் மோதுவார். ஜுவரேவ் இப்போட்டியில் வெற்றிபெற்றால் தொடர்ந்து 2ஆவது ஆண்டாக யுஎஸ் ஓபன் இறுதிப் போட்டிக்குள் நுழைவார். கடந்த மாதம் நிறைவடைந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி ஜுவரேவ் தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.