விளையாட்டு

அமெரிக்க ஓபன் ஆடவர் இறுதிப்போட்டி.. பட்டத்தை வெல்லப்போவது யார்..?

அமெரிக்க ஓபன் ஆடவர் இறுதிப்போட்டி.. பட்டத்தை வெல்லப்போவது யார்..?

Rasus

அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ரஃபேல் நடால் மற்றும் டேனீல் மேட்வேடிவ் இன்றிரவு பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு இந்தப் போட்டி ‌நடைபெறுகிறது. ரஷ்யாவின் டேனீல் மேட்வேடிவ், தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வசமாக்கும் முனைப்பில் களம் காணுகிறார். அதே நேரத்தில் ஸ்பெனின் நடால், தனது 19-ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல ஆவலுடன் உள்ளார். இவ்விரு வீரர்களும் ரோஜர் கோப்பை இறுதிப் போட்டியில் ஏற்கெனவே நேருக்கு நேர் சந்தித்து உள்ளனர். அந்தப் ‌போட்டியில் நடால் நேர் செட் கணக்கில் மெட்வேடிவ்வை வீழ்த்திருந்தார்.

ஆண்டின் இறுதி கிராண்ட் ஸ்லாமான அமெரிக்க ஓபனின் ஆடவர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலோங்கி உள்ளது.

முன்னதாக அமெரிக்க ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவில்‌, கனடாவின் பியான்கா‌ ஆன்டெர்ஸ்க்யூ பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். அவர் இறுதிப் போட்டியில் அனுபவ‌ வீராங்கனை செரினா வில்லியம்‌ஸை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.