bopanna
bopanna pt we
விளையாட்டு

யு.எஸ். ஓபன்: 43 வருடம், 6 மாதம்.. 13 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்த போபண்ணா!

Angeshwar G

நியூயார்க் நகரில், க்ராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. கடந்த செவ்வாய்கிழமை ஆண்கள் இரட்டையர் பிரிவுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடந்தன. இதில் இந்தியாவின் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி அமெரிக்காவின் நத்தானியல் மற்றூம் வித்ரோ ஜோடியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

அரையிறுதி ஆட்டத்தில் போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடி பிரான்ஸின் நிகோலஸ் மஹூட் - ஹெர்பெர்ட் ஜோடியுடன் மோதியது.

லூயிஸ் ஆம்ஸ்ட்ராங் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் போபண்ணா இணை பிரான்ஸை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 7-6 (7-3), 6-2 என்ற நேர் செட் கணக்கில் போபண்ணா இணை வெற்றி பெற்றது.

இதில் பிரான்ஸின் நிக்கோலஸ் மஹூட் - ஹெர்பெர்ட் இணை 5 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010 ஆம் ஆண்டு யு.எஸ். ஓபன் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்த போபண்ணா 13 ஆண்டுகளுக்கு பின் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 43 வயதாகும் போபண்ணா க்ராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அதிக வயதான வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.