பதினேழு வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து மற்றும் மாலி அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இங்கிலாந்து - ஜப்பான் அணிகள் இடையே கொல்கத்தாவில் நடந்த நாக்அவுட் சுற்றில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஷுட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் இங்கிலாந்து அணி 5 - 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள காலிறுதியில் அமெரிக்க அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. கோவாவில் நேற்று நடந்த மற்றொரு போட்டியில் மாலி அணி 5 - 1 என்ற கோல் கணக்கில் ஈராக் அணியை வென்றது.