தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டர்பனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத் கோலி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். முதல் போட்டியில் விளையாடிய வீரர்களே இதிலும் தொடர்கிறார்கள்.
தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் டுபிளிசிஸ், டிவில்லியர்ஸுக்கு பதிலாக, தப்ரைஸ் ஷம்ஷி, கயா ஸோண்டா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் கயா ஸோண்டாவுக்கு இதுதான் முதல் போட்டி. தப்ரைஸ் ஷம்ஷி ’சைனாமேன்’ வகை பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அணியை இளம் வீரர் மார்க்ரம் வழிநடத்துகிறார்.