விளையாட்டு

நாட் அவுட் கொடுத்த அம்பயர் - ரிவ்யூ கேட்டு விக்கெட் எடுத்த தோனி!

EllusamyKarthik

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாய் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடப்பு ஐபிஎல் சீசனின் 30-வது லீக் ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி 157 ரன்களை விரட்டி வருகிறது. 

மும்பை அணியின் இன்னிங்ஸில் தீபக் சாஹர் வீசிய மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில் டிகாக் பந்தை மிஸ் செய்ததால் அது அவர்களது பேடில் பட்டது. அதற்கு சென்னை அணி அப்பீல் செய்ய அம்பயர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் நாட்-அவுட் கொடுத்தார். 

உடனடியாக சென்னை அணியின் கேப்டன் தோனி, அம்பயரின் முடிவுக்கு எதிராக ரிவ்யூ சென்றார். அது டிவி அம்பயர் ரிவ்யூவில் பந்து ஸ்டம்பில் பட்டது தெளிவானது. அதன் மூலம் சென்னை அணி முதல் விக்கெட்டை கைப்பற்றியது. DRS சிஸ்டத்தை தோனி ரிவ்யூ சிஸ்டம் என ரசிகர்கள் சொல்வதுண்டு. 

மும்பை அணி இந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. மும்பை வீரர் அன்மோல்ப்ரீத் சிங்கை க்ளீக் போல்ட் ஆக்கிய சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர். அதேபோல், அதிரடி ஆட்டக்காரர் சூர்ய குமார் யாதவ் விக்கெட்டை வீழ்த்தினார் ஷர்துல் தாக்கூர். மேலும், இஷான் கிஷன் விக்கெட்டை எடுத்தார் பிராவோ.