விளையாட்டு

காயத்தால் நீங்கிய தகூர் : களத்தில் இறங்கிய உமேஷ்

காயத்தால் நீங்கிய தகூர் : களத்தில் இறங்கிய உமேஷ்

webteam

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசியக் கோப்பையின் வெற்றியை தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. இந்த சீரியஸில் 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடுகின்றன. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து உமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆனால் ஷர்துல் தகூர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அதேசமயம் அவர் மொத்தமே 1.4 ஓவர்கள் தான் வீசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இந்தப் போட்டியின் போது அவரது வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. 

இந்தக் காயம் தற்போது வரை சரியாகாததால், ஒருநாள் போட்டிக்கான அணியிலிருந்து ஷர்துல் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டை சாய்த்த உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒரு நாள் போட்டிகளை பொறுத்தவரையில் ஷர்துல் இதுவரை 5 போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளார். அதில் அவர் 6 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.