விளையாட்டு

நான் தப்பு பண்ணிட்டேன்: மன்னிப்பு கேட்டார் உமர் அக்மல்

நான் தப்பு பண்ணிட்டேன்: மன்னிப்பு கேட்டார் உமர் அக்மல்

webteam

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை விமர்சித்த விவகாரத்தில், தாம் தவறு செய்து விட்டதாக, உமல் அக்மல் ஒப்புக்கொண்டுள்ளார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மீது அந்நாட்டு கிரிக்கெட் வீரர் உமல் அக்மல் சமீபத்தில் பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறினார். ’என்னை மோசமான வார்த்தைகளால் ஆர்தர் திட்டினார். அதுவும் இன்சமாம் உல் ஹக் முன்னிலையிலேயே திட்டியதால் என் மனம் புண்பட்டது. அவர் என் மீது வசைமாரி பொழியக்கூடாது. பாகிஸ்தானில் உள்ள அனைவரையும் கெட்ட வார்த்தையால் திட்டுவதற்கு சமமானது இது. எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் அவர் யாரையாவது திட்டிக்கொண்டேதான் இருப்பார். அதனால்தான் நான் இதை வெளியில் சொல்ல வேண்டி வந்தது. எப்போதும் யாராவது ஒரு வீரரை அவர் திட்டிக் கொண்டேயிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. ஒரு பாகிஸ்தானியாக என்னால் இதனை சகிக்க முடியவில்லை’ என்று கூறியிருந்தார் உமர் அக்மல்.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மன உளைச்சல் காரணமாக அவ்வாறான தவறை தாம் செய்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற தவறு மேற்கொண்டு ஏற்படாதவாறு நடந்து கொள்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.