விளையாட்டு

கோலியின் சிக்சரை பிடித்த குட்டி ஆல் - ரவுண்டர்!

கோலியின் சிக்சரை பிடித்த குட்டி ஆல் - ரவுண்டர்!

webteam

இந்திய அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நேற்று வெற்றி பெற்றது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. 200-வது ஒரு நாள் போட்டியில் விளையாடிய கேப்டன் விராத் கோலி, 121 ரன்கள் எடுத்தார். 

விராத் கோலி 47 ரன்களில் இருந்த போது, நியூசிலாந்து வீரார் ஆதம் மில்னே வீசிய பந்தை பைன் லெக் சைடில் சிக்சருக்கு தூக்கினார். அப்போது மைதானத்துக்கு வெளியே வரும் பந்துகளை எடுத்துக் கொடுப்பதற்காக இருந்த ஆயுஷ் சிம்ரே என்ற சிறுவன் அபாரமாக அந்த சிக்சரை பிடித்தான். இதையடுத்து ஆயுஷுக்கு பாராட்டுகள் குவிகின்றன. இந்த ஆயுஷ், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில்  விளையாடி வரும் மும்பை ஆல்-ரவுண்டர். 
இதுபற்றி ஆயுஷ் கூறும்போது, ‘பந்து எனது இடத்தை நோக்கி வராததால் போரடித்தது. உட்கார்ந்துவிட்டேன். அப்போது கோலி அடிக்கும் பந்து நான் இருக்கும் திசையை நோக்கி வருவதைக்கண்டேன். திடீரென்று எழுந்து அதை ஒரு கையால் பிடித்தேன்’ என்றார்.

இதற்கு நியூசிலாந்த் வீரர்கள் முன்ரோ, டாம் புரூஸ் மற்றும் கிரிக்கெட் அலுவலர்கள் என்னை பாராட்டினார்கள். போட்டி முடிந்த பின், விராத் பாராட்டியதைதான் என்னால் மறக்க முடியவில்லை என்கிறார் ஆயுஷ். 

வருங்கால ஆல்-ரவுண்டர் ரெடி!