விளையாட்டு

சூதாட்டப் புகார்: இலங்கை வீரர் சமரசில்வாவுக்கு 2 ஆண்டுகள் தடை

சூதாட்டப் புகார்: இலங்கை வீரர் சமரசில்வாவுக்கு 2 ஆண்டுகள் தடை

rajakannan

இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சமரசில்வாவுக்கு இரண்டு ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு போட்டி ஒன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுந்தது. ஏழு மாதங்கள் நடைபெற்ற விசாரணைக்கு பின், சமரசில்வா மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர் இரண்டு ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க இலங்கை கிரிக்கெட் வாரியம் தடைவிதித்தது.

இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பனதுரா கிரிக்கெட் கிளப் மற்றும் கலுதரா பிசிகல் கல்சர் கிளப் இடையே இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற போட்டியில் சூதாட்டம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் கிளப் அதிகாரிகளுக்கு தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள சமரசில்வா இலங்கை அணிக்காக 75 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.