விளையாட்டு

‘கேம் ஸ்பிரிட்’ - நாட் அவுட் கொடுத்த அம்பயர்! பெவிலியன் திரும்பிய பூனம் ராவத்!

EllusamyKarthik

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தின் இரண்டாவது நாளன்று மெய்யான கேம் ஸ்பிரிட்டை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய வீராங்கனை பூனம் ராவத். 

அணியின் நம்பர் 3 பேட்ஸ்மேனான அவர் ஆட்டத்தின் 81-வது ஓவரில் Molineux வீசிய பந்து அவரது பேட்டில் பட்டு, விக்கெட் கீப்பரிடம் தஞ்சம் அடைந்தது. உடனடியாக ஆஸ்திரேலிய வீரர்கள் அதற்கு அப்பீல் செய்தனர். அதற்கு அம்பயர் ‘நாட் அவுட்’ என சொல்லியிருந்தார். இந்தப் போட்டியில் DRS முறை இல்லாததால் ஆஸ்திரேலிய வீரர்கள் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்ய  முடியவில்லை. 

இருப்பினும் பந்து தனது பேட்டில் பட்டதால் அம்பயரின் முடிவுக்காக காத்திருக்காமல் வேகமாக பெவிலியன் திரும்பினார் பூனம் ராவத். அவரது செயல் பலரது நெஞ்சையும் வென்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் பூனம் ராவத்தின் செயலை பாராட்டியுள்ளனர். இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 276 ரன்களை குவித்துள்ளது. 

போட்டியின் நிலை:

இத்தாலியின் கர்ராராவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. நேற்று முதல் நாள் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால் இந்திய அணி ஒரு விக்கெட் 132 ரன்களுக்கு எடுத்திருந்த நிலையில் ஆட்டம் நிறுத்திக் கொள்ளப்பட்டது. ஸ்மிருதி மந்தன 80, பூனம் ராவுட் 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாளான இன்றும் இந்திய அணி பேட்டிங் செய்தது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்திருந்தது. தீப்தி ஷர்மா 12, தனியா பட்டியா 0 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஸ்மிருதி மந்தனா 127(216) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதேபோல், பூனம் ராவட் 36 ரன்களுக்கும், கேப்டன் மித்தாலி ராஜ் 30 ரன்களுக்கும் பெவிலியன் திரும்பினர். யஸ்டிகா பாட்டியா 19 ரன்களில் அவுட் ஆனார். ஆஸ்திரேலிய தரப்பில் சோபிய் மொலினக்ஸ் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.