விராத் கோலி தலைமையிலான பலமான இந்திய அணி, அனுபவம் குறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது.
முதல் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள 11 வீரர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தினை விட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி அனுபவம் அதிகமாகும். கேப்டன் ஜேசன் ஹோல்டர் உள்ளிட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்களின் ஒட்டுமொத்த சர்வதேச ஒருநாள் போட்டி அனுபவம் 207 மட்டுமே. இந்திய அணிக்காக தோனி இதுவரை 291 போட்டிகளிலும், யுவராஜ் சிங் 301 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளனர்.
கடந்த ஓராண்டில் 16 போட்டிகளில் விளையாடியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதுவும் சமீபத்தில் முடிந்த ஆப்கானிஸ்தான் தொடரில் ஒரு போட்டியில் வெஸ்ட் அணி தோற்றது குறிப்பிடத்தக்கது.