விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களை அதிகமுறை டக் அவுட் செய்த டாப் 5 பவுலர்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களை அதிகமுறை டக் அவுட் செய்த டாப் 5 பவுலர்கள்

EllusamyKarthik

கிரிக்கெட்டின் அசல் வடிவம் என டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை கிரிக்கெட் ரசிகர்கள் சொல்வதுண்டு. பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் என ஒவ்வோரு வீரரும் அவர்களது டாஸ்குகளை சிறப்பாக செய்வதுண்டு. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களை அதிகமுறை டக் அவுட் செய்த டாப் 5 பவுலர்கள் குறித்து பார்ப்போம். 

வேகப்பந்து வீச்சாளராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் அதிகமுறை டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களை டக் அவுட் செய்த பவுலர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். மொத்தமாக 104 பேட்ஸ்மேன்களை ஆண்டர்சன் டக் அவுட் செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மெக்ரத்தும் 104 முறை பேட்ஸ்மேன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் டக் அவுட் செய்துள்ளார். 

இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னேவும் 102 முறை பேட்ஸ்மேன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் டக் அவுட் செய்துள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டைன் 83 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களை டக் அவுட் செய்துள்ளார்.