ஆடும் 11 வீரர்களுக்கான விதிமுறையில் முறைப்படி 7 சொந்த நாட்டு வீரர்கள் இடம்பெறவேண்டும் என்பதை மீறி, ஆடும் லெவனில் 6 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றதால் அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் லீக்கான NCL தொடரை தடைசெய்து கடிதம் அனுப்பியுள்ளது ஐசிசி.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4வது நடுவருக்கு எதிராக தவறாக பேசியதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்சாரி ஜோசப்-க்கு, நடத்தை விதிகளை மீறியதாக போட்டி கட்டணத்தில் 25 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது ஐசிசி.
11-வது புரோ கபடி லீக் தொடரின் முதலிரண்டு கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத் மற்றும் நொய்டாவில் நடைபெற்ற நிலையில், 3-ம் கட்ட லீக் ஆட்டங்கள் புனேவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 42-29 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஷையத் முஸ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டி டிசம்பர் 15-ம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், இன்று மத்திய பிரதேசம், சௌராஷ்டிரா, பெங்கால், பரோடா, மும்பை, விதர்பா, டெல்லி, உத்தர பிரதேசம் ஆகிய 8 அணிகள் காலிறுதிப்போட்டிகளில் விளையாடவிருக்கின்றன.
தன்னுடைய ஆரம்ப நாட்கள் குறித்து பேசியிருக்கும் பும்ரா, “என்னுடைய பவுலிங் ஆக்ஷனை பார்த்துவிட்டு எல்லோரும் 6-7 மாதங்கள்தான் இவர் கிரிக்கெட்டில் இருப்பார் என நினைத்தனர். எனக்கு யாரும் பயிற்சியளிக்க முன்வரவில்லை, நான் டிவியை பார்த்து மட்டுமே என்னுடைய திறனை வளர்த்துக்கொண்டேன்” என்று கூறியுள்ளார்.
நடப்பாண்டின் முதல் பாதியில் பிராண்ட் ஒப்புதல்கள் அடிப்படையில் அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக் கான் போன்ற பாலிவுட் ஜாம்பவான்களை பின்னுக்குத்தள்ளி, தோனி அதிக (42) விளம்பர ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தோனியின் இந்த எண்ணிக்கை அமிதாப்பை விட ஒன்றும், ஷாருக்கை விட 8 அதிகம் என கூறப்பட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த ஆரித் கபில் என்ற 9 வயது சிறுவன், அமெரிக்காவை சேர்ந்த 66 வயது செஸ்ட் கிராண்ட்மாஸ்டர் ராசெட் ஜியாடினோவை தோற்கடித்து, ஒரு செஸ் கிராண்ட்மாஸ்டரை தோற்கடித்த இளம் இந்திய செஸ் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மற்றும் ஹர்சித் ரானாவை நீக்கிவிட்டு, வாசிங்டன் சுந்தர் மற்றும் பிரசித் கிருஷ்ணாவை சேர்க்க வேண்டும் என ஹர்பஜன் கூறியுள்ளார்.
உலக கிரிக்கெட் நாடுகளில் அதிக வருமானம் ஈட்டும் பணக்கார கிரிக்கெட் சங்கங்கள் பட்டியலில், சுமார் ரூ.18,760 கோடி மதிப்போடு பிசிசிஐ உலகின் மிகப் பணக்கார சங்கமாக உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் ரூ.656 கோடியுடன் ஆஸ்திரேலியா, ரூ.492 கோடியுடன் இங்கிலாந்து கிரிக்கெட் சங்கங்களும் நீடிக்கின்றன.
ஜிம்பாப்வே அணிக்காக 1995 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை வேகப்பந்து வீச்சாளராக திறமையாக செயல்பட்டவர் ஹென்றி ஓலங்கா. இவர் அந்த அணிக்காக மொத்தம் 126 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தற்போது அவர் ஓவியராக வேலைசெய்துவரும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.