நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தனது 50-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
புனேவில் இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை தோற்கடித்தது. இந்தப்போட்டி இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 100-வது போட்டியாகும். 100-வது போட்டியில் நியூசிலாந்துடன் மோதிய இந்தியா, அந்த அணிக்கு எதிராக தனது 50-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இரு அணிகள் மோதிய 100 போட்டிகளில் நியூசிலாந்து அணி இதுவரை 44 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. 5 போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. ஷிகர் தவான் தனது 33-வது அரை சதத்தை இந்தப் போட்டியில் பதிவு செய்தார். இந்திய அணி வெற்றி பெற்றதும், ராஸ் டெய்லர் உள்ளிட்ட நியூசிலாந்து வீரர்கள் தோனி, தினேஷ் கார்த்திக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.