விளையாட்டு

ஐபிஎல்: சென்னை - மும்பை அணிகள் இன்று பலப்பரிட்சை!

ஐபிஎல்: சென்னை - மும்பை அணிகள் இன்று பலப்பரிட்சை!

JustinDurai

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணியும், 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல்லின் எல் கிளாசிக்கோ என்றழைக்கப்படும் இப்போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் நடப்பு சீசனில் தலா 6 போட்டிகளில் விளையாடியுள்ளன. சென்னை அணி 5 வெற்றிகளையும், மும்பை அணி 3 வெற்றியையும் வசப்படுத்தியுள்ளன.

இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அவற்றில் மும்பை அணி 19 முறையும், சென்னை அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. வெற்றிப்பாதையில் தொடர்ந்து பயணிக்கும் முனைப்பில் இரு அணிகளும் இன்றைய போட்டியில் களம் காண்கின்றன.