துபாயில் நடக்க உள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க, சென்னை அணி இன்று துபாய் செல்கிறது.
ஐபிஎல் 2020 அரபு அமீரகத்தில் நடக்க உள்ளது. இதனிடையே அண்மையில் பயிற்சிக்காக சென்னை வந்த சிஎஸ்கே அணியினர் இன்று துபாய் செல்கின்றனர். சென்னை அணியின் கேப்டன் தோனி, ரெய்னா, ஜடேஜா உள்ளிட்ட 16 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் என 51 நபர்கள் தனி விமானத்தில்அழைத்து செல்லப் படுகின்றனர்.
இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ள நிலையில் துபாய் சென்று இறங்கிய உடன் சென்னை அணி வீரர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.